திருப்பூர்
அனுப்பர்பாளையம்பிப்:12
தமிழக பண்பாட்டுக் கழகம் சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருபவர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் இந்திரா சுந்தரம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் இந்திரா சுந்தரத்தின் சிறந்த சமூக சேவையை பாராட்டி ராஜ கலைஞன் விருது மற்றும் தங்கப்பதக்கம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த விருதை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதில் தமிழக பண்பாட்டுக் கழகத் தலைவர் ஜாகிர் உசேன் செயலாளர் முத்துமாணிக்கம் பொருளாளர் ஜேசு பால்ராஜ் இந்திராசுந்தரம் தொண்டு நிறுவன செயலாளர் ராஜா முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.