திருப்பூர் ஜூலை:8
வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் க.செல்வராஜ் M.L.A. தலைமையில் வடக்கு மாநகரச் செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் முன்னிலையிலும் மாநில பிரச்சாரக் குழு நிர்வாகி உமா மகேஸ்வரி ,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி அவர்களின் ஏற்பட்டில், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி அவர்களின் உறுதுணையுடன், ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மகளிர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.கவில் இணைந்தனர்.
உடன் மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி அவர்களும், பகுதி கழகச் செயலாளர் முருகசாமி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.