திண்டுக்கல் ஜூலை : 18
திண்டுக்கல் கொசவப்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் இயக்கங்கள் மற்றும் மன்றங்கள் துவக்க விழாவில் திண்டுக்கல் மாவட்ட மேதகுஆயர் பி.தாமஸ்பால்சாமி டிடி, திருவருட் பேரவையின் தலைவர் டாக்டர்.கே. ரத்தினம், திருவருட் பேரவையின் இணைச் செயலாளர்
எம்.திபூர்சியஸ், அருட்பணி ஐ.ஜான்சன் எடின்பர்க் இணைந்து திருப்பு பேரவையின் பொருளாளர் சமூக ஆர்வலர் நாட்டாண்மை டாக்டர்.என்.எம்.பி.காஜாமைதீனுக்கு பொன்னாடை அணிவித்து கல்வி காவலர் விருது வழங்கினார்கள். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் 2500 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.