[2:46 pm, 25/12/2024] +91 96777 06646: ஊட்டி. டிச.26.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்ல பூங்கா போன்ற இடங்களை தவிர மற்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஊட்டி அருகே உள்ள தொட்டபெட்டா பகுதி ஊட்டி கோத்தகிரி சாலையில் அரசு தோட்டக்கலைக்கு சொந்தமான தேயிலை பூங்கா உள்ளது. இங்கு தேயிலை தோட்டம் , புல்மைதானம், விளையாட்டு சறுக்கு விளைவுகள், தோடர் குடில், மற்றும் தேயிலை தோட்ட மாடம் ஆகியன அமைந்துள்ளது. தொட்டபெட்டா சிகரம் அருகே உயரமான இடத்தில் அமைந்துள்ள பூங்கா போதிய விளம்பரம் இன்றி அமைந்திருப்பதால் பலருக்கு தெரிவதில்லை மேலும் தொட்டபெட்டா கோத்தகிரி சாலையில் இதே பகுதியில் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. மலை சரிவான பகுதியில் உள்ள இத்தோட்டத்தில் சாலை போக்குவரத்துக்கு இடையூராக பல தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
[2:46 pm, 25/12/2024] +91 96777 06646: மேலும் இதே பகுதியில் அமைந்துள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் விதிமுறைகளுக்கு மீறி அதிக கட்டணங்கள் வசூலித்து சுற்றுலா வாசிகளை அனுமதிக்கின்றனர். இப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனியார் தோட்டத்திற்கு சென்று விடுவதால் அரசு தேயிலை பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அரசுக்கு வருமான இழப்பும் ஏற்படுகிறது. எனவே இதனை போக்க மாவட்ட சுற்றுலா வினரின் நலன் கருதி இப்பூங்காவின் முகப்பு வாயிலில் டிக்கெட் வழங்க கான்கிரீட் குடிலும் அமைப்பதோடு, பூங்காவின் உள்பகுதியில் கண்ணாடி மாளிகை, பறவைகளை காண உயர் கோபுர மாடம், மூலிகை பொருட்கள் விற்பனையகம், தேயிலைத்தூள் விற்பனையகம் போன்றவை அமைத்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அதிகமான குளிரில் பாதிக்கப்படுவதை தடுக்க கான்கிரீட் அறை ஆகியவற்றை ஏற்படுத்தி செயற்படுத்துவதோடு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாலையோரங்களில் விபத்து தடுப்புகளை ஏற்படுத்தியும், தனியார் தேயிலை கண்காட்சி இடங்களை அரசு தடை செய்ய வேண்டும் எனவும் தனியார் வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதை தடை செய்வதோடு கடந்த ஆண்டு குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடத்திய தேயிலை கண்காட்சியை இந்த ஆண்டு தேயிலை பூங்காவில் நடத்த வேண்டும் எனவும் சுற்றுலா வாசிகளும், சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.