சேலம்
சேலத்தில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ,கோவை அணிகள் மோதுகின்றன. டி என் பி எல் கிரிக்கெட் தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2016 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடராக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது அதன்படி இந்த ஆண்டு எட்டாவது சீசன் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் ஐந்தாம் தேதி சேலத்தில் தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் பாபா டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது 2024 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் ஜூலை 5ஆம் தேதி தொடங்குகின்றது. சேலத்தில் ஐந்தாம் தேதி முதல் 11-ம் தேதி வரை 9 போட்டிகள் நடக்கின்றன அதன் பிறகு கோவையில் ஜூலை 13ஆம் தேதி முதல் 18-ம் தேதி வரையும் திருநெல்வேலியில் ஜூலை இருபதாம் தேதி முதல் 24ஆம் தேதி வரையும் திண்டுக்கல்லில