நாகர்கோவில் – ஜூலை – 20,
ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள களியங்காடு சிவன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது . தொடர்ந்து ராகு கால துர்கா பூஜையும் நடைப்பெற்றது . இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு துர்க்கை அம்மனையும் சிவ பெருமானையும் வழிப்பட்டனர்
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது, அம்மனுக்கு கஞ்சி. பாயாசம், கொழுகட்டை படைப்பது, தீ மிதித்தல், என பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் . அந்த வகையில் ஆடி மாதம் முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவடத்தில் அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றது . அந்த வகையில் நாகர்கோவில் அருகே அருள்மிகு களியங்காடு சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் சன்னிதானத்தில் 101 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது . தொடர்ந்து ராகு கால துர்கா பூஜையும் நடைப்பெற்றது . அதனை தொடர்ந்து சிவபெருமானுக்கு மீனாட்சி அம்மனுக்கும் தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிப்பட்டனர். அதனை தொடர்ந்து பக்கதர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அனைத்து பக்த பெருமக்களும் ராகு கால துர்கா பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமான் மற்றும் அம்மன் அருள் பெற்றனர்.
மாலை பிரதோஷம் ஐந்து முப்பது மணிக்கு சிவபெருமானுக்கும் நந்தி தேவர்க்கும் அனைத்து வகை அபிஷேகங்களும் நடைபெற்றது. ஆறு முப்பது மணிக்கு அலங்காரம் பிரதோஷ தீபாராதனை தொடர்ந்து 6.40 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் பதிவு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் உடனே பிரசாதம் வழங்கப்பட்டது.