நாகர்கோவில் ஜனவரி 16
திருவள்ளுவர் தின விழா நாகர்கோவில் கணபதி நகரில் நடைபெற்றது. விழாவிற்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தலைமை வகித்தார். அகில இந்திய தமிழர் கழகத்தின் உயர்மட்ட குழு உறுப்பினரும் கணபதிநகர் விழா பொறுப்பாளருமான இராமசுவாமி பிள்ளை முன்னிலை வகித்தார்.
விழாவில் திருக்குறள் போட்டியில் அரசு சார்பில் விருது பெற்ற தானேஷ் பிரனாவ், அர்ஜுன், இராம பிரதாப், பெஃபின், திவ்ய பிரியா, லக்ஷனா ஆகியோருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குறளகம் நிறுவனர் தமிழ்க்குழவி, டாக்டர் ராஜேஷ் கோபால், வழக்கறிஞர் கோ. ராதாகிருஷ்ணன் மற்றும் தெய்வராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
விழாவில் முக்கிய கோரிக்கையாக திருக்குறள் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக தமிழ்நாடு அரசு உயர்த்தி கொடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் இருந்து நடந்து செல்லும் வகையில் அமைக்கப் பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்திற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் ராஜன் ராணி, இப்ராஹிம், ஸ்டான்லி, சேவியர், சிவன், முத்துகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தைசாமி வரவேற்று பேசினார். அகில இந்திய தமிழர் கழக செய்தி தொடர்பாளர் இ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்