திருப்பூர்மே:29
குமரன் சாலையில் உள்ள, மலபார் கோல்ட் & டைமன்ட் சார்பாக தினசரி 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் .க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
இந்நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாவட்ட துணை செயலாளர்கள் டிஜிட்டல் சேகர், ஜி.கே நந்தினி, மாமன்ற உறுப்பினர்கள் செந்தூர் முத்துக்கிருஷ்ணன், திவாகரன், தெற்கு மாநகர துணை செயலாளர் மகாலட்சுமி, எல்.பி.எப் மாவட்ட தலைவர் பி.எஸ்.பாண்டியன், மற்றும் மலபார் கோல்ட் & டைமன்ட் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.