திருப்பூர் ஜூன்:22
மாவட்ட ஆட்சியர் திரு.கிறிஸ்து ராஜ். உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மரு.விஜயலலிதாம்பிகை அவர்களின் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவி மற்றும் பாலமுருகன் அடங்கிய குழுவினர் இன்று காலை திருப்பூர் நகரம், தாராபுரம் ரோட்டிலுள்ள பேக்கரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் வணிகம் செய்த பேக்கரிக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பை, பிளாஸ்டிக் ஸ்பூன் மற்றும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா பயன்படுத்தியதை கண்டறியப்பட்ட பேக்கரிக்கு இரண்டாம் முறை குற்றத்திற்க்காக ரூ.5,000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத, லேபிள் விதிகள் கடைபிடிக்காமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 2Kg பிரட், 10லிட்டர் குளிர்பானங்கள், 3 Kg அளவிலான திண்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் 2 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் ஆய்வின் போது ஒரு மளிகை கடையில் நிறமிகள் கலந்த கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் மேற்படி கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 156 கிலோகிராம் கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்து. மேற்படி கலப்பட டீத்தூளானது உணவு மாதிரியாக எடுக்கப்பட்டு பகுப்பாய்வு கூடத்திற்க்கு பகுப்பாய்விற்க்காக அனுப்பப்பட்டது. மேலும் மேற்படி கடையில் சுமார் 18Kg அளவிலான தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2,000/- அபராதம் விதிக்கப்பட்டதோடு நோட்டீஸும் வழங்கப்பட்டது. இன்றைய ஆய்வின் போது மொத்தம் ரூ.8,000/- அபராதம் விதிக்கப்பட்டு, 3 நோட்டீஸ் வழங்ப்பட்டது.
மேலும் உணவின் தரம் சார்ந்த புகார்களை 9444042322 என்ற வாட்சப் எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது tn food safety consumer complaint app – ல் பதிவேற்றம் செய்ய பொது மக்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.