மதுரை
திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு வருமானம் 27,34,774/-
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியலில் திறப்பு வருமானம் 27,34,774 மற்றும் பொன் இனங்கள் 164 கிராம் மற்றும் வெள்ளி இனங்கள் 2250 கிராம் கோவிலுக்கு வருமானமாக கிடைக்க பெற்றது. இந்த உண்டியல் திறப்பின் போது திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி நா.சுரேஷ் மற்றும் உதவி ஆணையர் / செயல் அலுவலர் நயக்கு நாராயணன் மற்றும் அறங்காவலர் குழுத்தலைவர் ப.சத்திய பிரியா மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், நா.மணிச்செல்வம், திமு.பொம்மதேவன், வ.சண்முகசுந்தரம். தி.இராமையா மற்றும் திருப்பரங்குன்றம் இந்துசமய அறநிலையத்துறை ஆய்வர் இளவரசி, உள்துறை கண்காணிப்பாளர்கள் ச.அ.சுமதி, திரு.ஜெ.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் இத்திருக்கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலயா வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள், மதுரை, அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணியசுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் உள்ள பணத்தை என்னும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.