மதுரை அக்டோபர் 2,
மதுரை மாவட்டம் திருப்பாலை யாதவர் பெண்கள் கலைக்கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை” மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், உதவி ஆட்சியர்(பயிற்சி) வைஷ்ணவி பால், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.