கன்னியாகுமரி ஜன 16
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் 18 வது ஆண்டு திருச்செந்தூர் காவடி பாதயாத்திரை தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆலய நிர்வாககுழுத் தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கபாண்டியன் ஆசிரியர் பொருளாளர் மேட்டுக்குடி முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாசித்திருவிழாவின் 3ஆம் நாள் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி மதியம் அஞ்சுகிராமம் அழகிய விநாயகர் ஆலய வளாகத்தில் அன்னதானம் வைப்பது, அன்று மாலை 4 மணிக்கு காவடி ஊர்வலம் மற்றும் 6 ஆம் தேதி ஆலய வளாகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு காவடி பாதயாத்திரை புறப்படுவது,
திருச்செந்தூரில் காவடி பாதயாத்திரையில் பங்கு பெறுவோர் கண்டிப்பாக அனுமதி டோக்கன் வாங்கிக் கொள்ள வேண்டும்.
மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று மாலை 6:30 மணிக்கு நடைபெறும் இடும்பன் பூஜையில் அனைத்து காவடி பக்தர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆலய செயற்குழு உறுப்பினர்கள் வீடியோகுமார், பால்ராஜ், செல்லத்துரை, பரஞ்ஜோதி, சுரேஷ், மற்றும் காவடி பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.