மதுரை நவம்பர் 3,
மதுரை மாநகரில் அமைந்துள்ள திலகர் திடல் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட தமிழ் சங்கம் ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், ஒழுங்கு முறைபடுத்தும் வகையிலும்
திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஏற்பாட்டில்
சாலையின் மையத்தில் இரும்பு தடுப்பான் அமைத்து வாகனங்கள் முறையாக செல்லவும், பக்கவாட்டு பகுதிகளில் தேவையற்ற வாகன நிறுத்தத்தை தவிர்க்கவும், விபத்தை தடுக்கவும் மையப்குதியில் இரும்பு தடுப்பான் அமைத்ததால் மழை நேரங்களில் வாகனங்களை முந்தி செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டு முறையாக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லுகின்றன என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு அளித்து திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டி வருகின்றனர்.