மதுரை ஜூலை 09
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு டிக்டோஜாக் சார்பில் கலந்தாய்வு சட்ட திருத்தம் 243 திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரையில் ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக்கு மாறாக நடைபெற உள்ள மாநில அளவிலான பணி மாறுதல் கலந்தாய்வினை நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு (டிக்டோஜாக்) சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷ முழக்கமிட்டனர்.
அதனைத் தொடர்ந்து
தொடக்கப் பள்ளி மாநில பொதுக்குழு உறுப்பினர்
பரசுராமன்
பேசுகையில்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
அரசாணை எண் 243 அமல்படுத்துவதால் ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் சிக்கல் ஏற்படும் எனவும் இதனால் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்ப்படக்கூடும் எனவே தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமெனவும்
மேலும்
எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றாவிட்டால் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தமிழரசன் செல்வம் கதிரேசன் தேவதாஸ் காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.