நாகர்கோவில் நவ 24
கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நாகர்கோவில் தலைமை தபால் அதிகாரி தலைமையில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து நடை பயண நிகழ்ச்சி.
செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை தூய் மையே சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் 16 முதல் வருகிற 30-ந்தேதி வரை தபால் துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதையொட்டி விழிப்புணர்வு நடைபயணம் நேற்று கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் மேற்பார்வையில் நாகர்கோவில் தலைமை தபால் அதிகாரி சுரேஷ் தலைமையில் தூய்மையின் முக்கியத்துவம் அடங்கிய பாதைகள் ஏந்தியபடி நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தொடங்கி முக்கிய நகர் வீதிகள் வழியாக நாகராஜா கோவில் வந்து தலைமை தபால் நிலையம் வரை நடைபயணம் நடைபெற்றது. இதில் தபால் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.