நாகர்கோவில் , ஜூலை -1
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உட்கோட்ட காவல்நிலையங்களில் சமீப காலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் திசையன்விளை பகுதியை சேர்ந்த தவசிபால்(எ) ஏசேக்கியேல் வயது-37 என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் இவர் கோட்டார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி மற்றும் சுசீந்திரம் ஆகிய காவல்நிலையங்களில் 9 இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது. மேலும் கிடுக்குபிடி விசாரணையில் இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த திருட்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட செண்பகராஜ் வயது- (35) மற்றும் அவரது மனைவி திருப்பதி வயது- (31) ஆகியோர்களை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி சென்று கைது செய்து திருடு போன சுமார் 12½ லட்சம் மதிப்புள்ள 305 கிராம் தங்க நகைகள் மற்றும் சுமார் 1¼ லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மொத்தம் (14.00,000) மதிப்புள்ள பொருள் .மீட்கப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.