கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல்தொரை கிராம வனப்பகுதியில் ஒரு சிலர் மானை வேட்டையாடியதாக, கட்டப்பட்டு வனச்சரக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வனச்சரகர் செல்வகுமார் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த பகுதியை சேர்ந்த 3 பேர், சுருக்கு கம்பி வைத்து மானை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.