நாகர்கோவில் – மே – 28,
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளகுறிச்சி காவல்நிலைய எல்கைக்கு உட்ப்பட்ட கொல்லன் விளை பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (60), மற்றும் அவரது மனைவி கலாவதி (58) தர்லிங்கத்திற்க்கு மூன்று பெண் குழந்தைகள் இவர்களை வெவ்வேறு பகுதியில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு வீட்டில் தர்மலிங்கம் மற்றும் மனைவி கலாவதி வாழ்ந்து வருகின்றனர். தர்மலிங்கத்தின் இரண்டாவது மகள் ஸ்ரீலேகா ஆறு மாத கர்ப்பிணியாவார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தாயார் வீட்டில் இருந்து வரும் நிலையில், ஸ்ரீ லேகாவின் கணவர் சுகின் (31) மனைவியை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சுவாமி நாடார் வீட்டில் உள்ள மரக்கிளை தர்மலிங்கத்தின் வீட்டின் எல்கைக்கு உள்ளாக படர்ந்து நிர்ப்பதால் அதிலிருந்து இலை, தழைகள் விழுவதாலும் கடி எறும்பு, தேள், போன்ற விஷ வண்டுகளின் தொந்தரவு இருப்பதாலும் மரக்கிளையை வெட்டி அகற்றும்படி சுவாமி நாடார் இடம் தெரிவித்ததில் இருந்து சிறு பிரச்சனை இருந்து வந்துள்ளது. நேற்றும் மரக்கிளையை அப்புறப்படுத்த கூறி இரு வீட்டாருக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சமயம் உடல் நலம் சரியில்லாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்றிருந்த சுகின் மரக்கிளையை தானே வெட்டி அகற்றச் சொன்னார்கள் அதற்கு ஏன் தகாத வார்த்தைகளால் திட்டி ஆபாசமாக பேசுகிறீர்களே என கேட்டு இந்தச் சண்டைக்கு காரணமான மரக்கிளையை வெட்டி அகற்றி சமாதானமாக போங்கள் எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த சுவாமி நாடார் (65) , மனைவி சரஸ்வதி (60) , மகன் தினகரன் (40) , மற்றும் தினகரனின் மனைவி சுமிதா ஆகியோர் இணைந்து நீ யாரடா இதில் பேசுவதற்கு எனக் கேட்டுக் கொண்டே அடிப்பதற்கு பாய்ந்து சென்று
சுகின், மற்றும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் கலாவதியை ஆகியோரை இரும்பு கம்பி, மற்றும் வெட்டு அருவாளை திருப்பி வைத்து தாக்கியதில் சுகினுக்கு தலை, மற்றும் நெற்றி, கழுத்து , இடுப்பு பகுதியில் பலத்த இரத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது, மேலும் சுவாமி நாடார் வீட்டில் வளர்க்கும் நாயை சுவாமி நாடார் மகன் தினகரன் (40) ஏவி விட்டு சுகினை கடிக்க வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் அடி வாங்கிய சுகின் நாய்க்கடியும் வாங்கியுள்ளார். இதனை தடுக்க வந்த கலாவதியின் நெற்றி மற்றும் கையில் இரும்பு கம்பியால் தாக்கியதில் அவருடைய கையில் முறிவு ஏற்ப்பட்டது. மேலும் சுகினின் கர்ப்பினி மனைவியை தினகரன் மனைவி சுகிதா தலைமுடியை பிடித்து இழுந்து கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனால் ஸ்ரீலேகாவிற்க்கு பலத்த அடிபட்டது. பலத்த காயத்துடன் மூவரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண மரக்கிளையை வெட்டி அகற்றச் சொன்னதினால் ஏற்பட்ட பிரச்சினையினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து மணவாளகுறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.