மதுரை மார்ச் 9,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா
மதுரை அய்யர்பங்களா அருகில் உச்சபரம்பு மேடு பகுதியில் உள்ள பாண்டியன் மகாலில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இயக்கத்தின் தலைவர் செல்வகுமரேசன், செயலாளர் ஜெபத்துரை, பொருளாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் மற்றும் மேற்கு ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜோஸ்பின் ரூபி, விஜய லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து
இந்நிகழ்ச்சியில் பணிநிறைவு பெற்ற 18 ஆசிரிய பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர்.
மேலும் பரவை ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியர் புவனேஸ்வரிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது மற்றும் கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர். மற்றும் மதுரை மேற்கு வட்டாரத்தில் சிறந்த பள்ளிகளாக வீரபாண்டி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமரேசன், மற்றும் பரசுராமன்பட்டி ஊ.ஒ.தொ. பள்ளி தலைமை ஆசிரியர் அகிலா ஆகியோரை தேர்ந்தெடுக்கப்பட்டு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர். மேலும் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர் வாசுகி சசிகுமாருக்கு பணியில் சிறந்த மங்கைகான விருதை மகளிர் தின வாழ்த்துக்கள் கூறி பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டி கொளரவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள். மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், அலங்காநல்லூர் வட்டாரம், திருமங்கலம் வட்டாரம், செல்லம்பட்டி வட்டாரம், வாடிப்பட்டி வட்டாரம், சேடப்பட்டி வட்டாரம், கள்ளு குடி வட்டாரம், மேலூர் வட்டாரம், மதுரை மேலாண் மாவட்ட பொருளாளர் தென்னவன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என 1000 பேர் கலந்து கொண்டு அறுசுவை உணவு வழங்கி விழாவினை சிறப்பித்தனர்.