வேலூர்=28
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த நெல்வாய் ஏதேன் ஜெப வீடு சுயாதீன திருச்சபைகள் பேராயம் சார்பில் கிறிஸ்துபிறப்பு விழா மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பேராயத்தின் ஆண்டு விழா
ஆகிய முப்பெரும் விழா ICD நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எம். காலேப் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்றது.ICD துணைத் தலைவர் எஸ். குட்டிசாமுவேல் வரவேற்புரையாற்றினார் இதில் சிறப்பு அழைப்பாளர்கள் ICD செயலாளர்கள்
டாக்டர் பி.வின்சன்சாமுவேல்,
டாக்டர் ஜே .ரபிநேசன்
பேராயர் எஸ்.யாக்கோபு ,இசை மாநில தலைவர் ஜார்ஜ்
,ராபர்ட் தனராஜ்
பார்த்திபன்,
பவன் குமார்,
ஜான்ரூபன்தாஸ் ,ஆகியோர் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் 150 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், போர்வைகள் ,புத்தாடைகள் ,கேக் மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.