திண்டுக்கல்
ஜுலை:14
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த மூன்றுநாள் பயிற்சி திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பயிற்சி மையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் சரவணன் தலைமை தாங்கினார்.
உதவி திட்ட அலுவலர் ( நகர்ப்புறம் )
ஜீவரம்யா முன்னிலை வகித்தார். சமுதாய அமைப்பாளர் வினோதினி வரவேற்புரை ஆற்றினார். இதில் மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அமைதி அறக்கட்டளையின் மேலாளரும், மாநில வள பயிற்றுனருமான டாக்டர்.
ஆ.சீனிவாசன் மூன்றாவது நாள் பயிற்சியில் கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான
நிதி மேலாண்மை, தொழில் முனைவதற்கான சட்டங்கள், தொழில் பதிவின் முக்கியத்துவம், குடும்ப வரவு செலவுத் திட்டங்கள், ஜிஎஸ்டி முக்கியத்துவம், திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் தொடர்ந்து கண்காணித்தல், தொழில் செய்யும் இடங்களின் தேர்வு, உள்ளூர் வளங்கள், விற்பனை உத்திகள், தொழில் வாய்ப்புகளை கண்டறியும் முறை, வணிக வடிவம், சந்தை மேலாண்மை. திட்ட அறிக்கை தயாரித்தல், வங்கி நடைமுறை கள் மற்றும் பணப்பரிமாற்ற முறைகள், அரசு மானிய உதவித்திட்டங்கள் மற்றும் வங்கி சேவைகள் குறித்து பேசினர்.இதில் மாவட்ட வள பயிற்றுனர் பாபு மற்றும் சௌந்தர பாண்டி ஆகியோர்கள் முதல்நாள் மற்றும் இரண்டாம்நாள் பயிற்சியில்
சுயதொழில் திட்டம் குறித்து வாடிக்கை யாளருக்கு சிறந்த சேவை அளிப்பது, டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்து விரிவாக எடுத்துரைத்த னர்.இதனை தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களின் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த பயிற்சியில் நத்தம், அகரம்,தாடிக்கொம்பு, வேடசந்தூர் ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து 50 மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இடிஐஐ ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் செல்வி சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்தார்.நிகழ்ச்சியின் முடிவில் சமுதாய அமைப்பாளர் கண்மணி நன்றி கூறினார்.