காரியாபட்டி – ஜூன் – 15
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வரலொட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. சோணை முத்தையா – கலுவடையான் கோவில் இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் பொங்கல் விழா மற்றும் களரி விழா நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டு கோவில் களரி பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் புல்லலக் கோட்டையில் உள்ள பொளச்சி யம்மன் கோவிலில் வழிபாடு செய்து விட்டு சோணை சாமிக்கு பூஜை செய்தனர். அதன் பின்னர் சாமி ஆட்டத்துடன் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சயாக காரியாபட்டி-யை சேர்ந்த ராமர் என்ற பக்தர் சாமி ஆட்டத்துடன் வந்து முள் படுக்கையில் தலை குப்புற கவிழ்ந்து சிறுது நேரம் காத்திருந்து வினோதமாக பக்தியுடன் வழிபாடு செய்து அவரது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.