வெள்ளையந்தோப்பு- வேம்படி சிவசுடலைமாடசுவாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை -பி.டி.செல்வகுமார் தொடங்கி வைத்தார்
தென்தாமரைகுளம்., டிச. 23.அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பில் உறவினர் வகை வேம்படி சிவசுடலைமாடசுவாமி திருக்கோவிலில் 18-வது வருஷாபிஷேக விழா மற்றும் கொடை விழாவில் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், கலப்பை மக்கள் இயக்க மாநில மகளிர் அணி தலைவி டாக்டர் ஸ்ரீ ரங்கநாயகி, குமரி மாவட்ட திருவிளக்கு பூஜை வழிபாட்டு குழுத் தலைவர் பொன்செல்வி, வெள்ளையந் தோப்பு ஊர் தலைவர் டாக்டர் இரத்ன சிகாமணி, கோவில் நிர்வாகிகள் தலைவர் ஸ்ரீ ஹரி பத்மநாதன், செயலாளர் பொன்னுலிங்கம், பொருளாளர் சுடலைமணி, தங்கம் ,லிங்கம் ,பரத் ,சுமன், அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .