மயிலாடுதுறை பிப்.7
ஆம்புலன்ஸ் சேவையை திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த திருவாவடுதுறையில் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜை விழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சி ஆன பட்டினப்பிரவேசம் நேற்று முன்பு நடைபெற்ற நிலையில், விழாவின் ஒரு பகுதியாக இரத்ததான முகாம் இன்று திருவாவடுதுறையில் நடைபெற்றது. முகாமை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் துவக்கி வைத்து, ரத்ததானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து தாயாரம்மாள் அறக்கட்டளை மூலம் புதிய ஆம்புலன்ஸ் சேவையை மடாதிபதி துவக்கி வைத்தார். இதனை அடுத்து தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தாயாரம்மாள் அறக்கட்டளையின் ஊக்கத்தொகையையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் தங்க சேதுராமன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.