தஞ்சாவூர். ஜன. 22.
திருமானூர் பிரில்லியன்ட் மழலையர் தொடக்கப்பள்ளியில் விஜிபி உலக தமிழ்ச் சங்கம் வழங்கிய 175 வது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தமிழக நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
விழாவிற்கு விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி ஜி பி சந்தோஷம் தலைமையிலும், மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் சங்கர், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் அரங்க பாரி முன்னிலையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சங்கீதா அனைவரையும் வரவேற்றார். பள்ளி வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள திருவள்ளுவர் சிலையினை தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்
பள்ளி தாளாளர் கண்ணகி சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசினை வழங்கி சிறப்பித்தார் .முன்னதாக பள்ளி செயலர் முகில் வேந்தன் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார் .விழாவில் முனைவர் கலைவேந்தன் திருவள்ளுவர் அறம் கவின் மொழிகள், 100 திருக்குறள் வழியில் அறவழி , தமிழ் பெயர்கள் உட்பட ஆறு நூல்கள் வெளியிடப்பட்டன .
விழாவில் கலைமாமணி டாக்டர் நரேந்திரன், புலவர் கந்தசாமி திருக்குறள் ஞானமன்ற தலைவர் பன்னீர் செல்வம், இளங்கோவன் அருள் பிரகாஷம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஆசிரியர் ஜென்சி நன்றி கூறினார்
விழாவிற்கு முன்னதாக அமைச்சருக்கு பாரம்பரிய கிராமிய முறையில் சிறப்பான வரவேற்பாக கொம்பு ,மேளதாளம் ட்ரம் செட் போன்ற வாத்தியங்கள் இசைத்து வரவேற்பு கொடுக்கப் பட்டது.