மதுரை ஜனவரி 29,
மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலில் 3 வருடத்திற்கு ஒரு முறை மூலவர் சுந்தர ராஜ பெருமாள், தேவியர்களுக்கு திருத்தைலம் சாத்தப்படுவது வழக்கம் அதன்படி இன்று தை அமாவாசை 29.01.2025 புதன்கிழமை காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தைலக்காப்பு சம்ப்ரோஹணம் நடைபெறுகிறது. இனிவரும் 6 மாத காலங்களுக்கு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறாது ஆகவே தை மாதம் அமாவாசை முதல் ஆடி அமாவாசை முடிய (27.01.2025 முதல் 24.07.2025 வரை ) நித்தியபடி மாலைகள் மற்றும் பரிவட்டம் சாத்துப்படி அனைத்தும் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளுக்கு (கள்ளழகர்) மட்டும் நடைபெறும். வருகிற ஜூலை மாதம் 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை நாளில் மூலவருக்கு வழக்கம் போல் பூஜைகளும் தீபாராதனைகளும் 6 மாதங்கள் கழித்தே நடைபெறும். எனவே பக்தர்கள் உற்சவர் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாளை தரிசித்து அருள்பெற வந்திருந்தனர்.