ஈரோடு ஆக 20 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்த நாள் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் கொண்டாடப்பட்டது இதை யொட்டி ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மரப்பாலத்தில் அசைவ அன்னதானம் வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டது. மேலும் ஆதரவற்ற குழந்தைகள் முதியோர் இல்லங்களில் காலை மதிய உணவு வழங்கப்பட்டது .ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கான கபாடி போட்டி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் எஸ் எம் சாதிக் தலைமை தாங்கினார். மர பாலத்தில் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மண்டல
தலைவர் ஜாபர் சாதிக், திமுக பகுதி செயலாளர் தண்டபாணி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் பால்ராஜ், ஆனந்தன் , கதிரவன், சேகர் ,செய்தி தொடர்பாளர் பைஜூல் அகமது மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.