சுசீந்திரம் டிச 24
காங்கிரசால் தோற்கடிக்கப்பட்ட டாக்டர் சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் கொள்கைக்கு மாறாக காங்கிரஸோடு கூட்டணி வைக்கும் திருமாவளவனை கண்டித்து சுசீந்திரம் பகுதியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக சார்பில் தொல். திருமாவளவன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜக சார்பில் நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஜெகநாதன், ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், பா.ஜ.க. பொருளாதார பிரிவு குமரி மாவட்ட தலைவரும், நாகர்கோவில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமாகிய ஜவான். ஐயப்பன், அரசு தொடர்பு பிரிவு செயலாளர் வழக்கறிஞர் சுயம்புலிங்கம், ஒன்றிய பொதுச்செயலாளர் மாதவன், இளையராஜா, தகவல்பிரிவு மாவட்ட செயலாளர் சுபாஷ், ஒன்றிய செயலாளர் தினேஷ், மயிலாடி பேரூர் தலைவர் பாபு, ஒன்றிய துணைத் தலைவர் கனகராஜ், விருந்தோம்பல் பிரிவு ஒன்றிய தலைவர் ரவீந்திரன், கூட்டுறவு பிரிவு செந்தில், சுரேஷ், வெளிநாட்டு தமிழ் வளர்ச்சி பிரிவு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.