ஆம்பூர்:டிச:27, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், மேல்கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயிலில் மார்கழி மாத திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவானது முதல் நாளான நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அம்மனுக்கு தங்க நகைகளால் அலங்கரித்து வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து கூழ் வார்த்தல், பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர் இத்னைத் தொடர்ந்து இன்று அதிகாலை அம்பிகைக்கு அங்க பிரதட்ஷணம் செய்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து.
30 அடி உயரம் கொண்ட திருத்தேர் புறப்பாடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கெங்கையம்மன் ஆலயத்திலிருந்து திருப்பத்தூர் ,திண்டுக்கல், தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் இருந்து உலக அளவில் புகழ் பெற்ற கலைஞர்களின் நையாண்டி பப்பை மயிலாட்டம் மற்றும் தாரை தப்பட்டை நாதஸ்வரம் முழங்க திருத்தேர் ஊர்வலம் புறப்பட்டு மேல் கிருஷ்ணாபுரம், பஜார், எஸ் கே ரோடு நேதாஜி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோயில் வநதடைந்தது.
இதில் திருப்பத்தூர் ,வேலூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா ஆந்திரா கேரளா பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தேரை வட பிடித்து இழுத்து திருத்தேர் மீது பூக்கள் மற்றும் பொறி மிளகு ஆகியவற்றை போட்டு தங்களது வேண்டுதலை நிறைவேற வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு கெங்கையம்மன் ரெட்டிதோப்பு பகுதியில் உள்ள அணையில் கரைக்கப்பட்டு நாளை அம்மன் புஷ்பபல்லக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.