மதுரை டிசம்பர் 8,
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில்
திருக்கார்த்திகை தீப திருவிழா
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில்
திருக்கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு கார்த்திகை 20 முதல் கார்த்திகை 29 முடிய 05-12-2024 வியாழக்கிழமை முதல் 14-12-2024 சனிக்கிழமை வரை பத்து நாட்கள் திருவிழா. இதனை தொடர்ந்து கார்த்திகை தீபத் திரு விழா கொடியேற்றத்துடன் டிசம்பர் 5 ந்தேதி வியாழக்கிழமை முதல் நாள் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி, காலையில் உற்சவர் சந்நிதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்று சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதையடுத்து, சுவாமி தெய்வானையுடன் சிறப்பு
அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர், காலை 8.50 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து டிசம்பர் 6 ந்தேதி
வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி திருக்கார்த்திகை
இரண்டாம் தீபத்திருநாள் முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை காலை எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது மாலை திருவாச்சி மண்டபத்தில் சிறப்பாக அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது சுப்ரமணிய சுவாமி தெய்வானை பூத வாகனத்தில் வெள்ளி திருவீதி உலா நடைபெற்றது சுப்ரமணியசாமி தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் அரோகரா அரோகரா கோஷத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் திருநாள் 7 ந்தேதி சனிக்கிழமை காலை தங்கச் சப்பரத்தில் சுப்ரமணியசாமி தெய்வானை எழுந்தருளி மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை சுப்பிரமணியசாமி தெய்வானை திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று அன்ன வாகனத்தில் எழுந்தருளி மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று நான்காவது நாளாக 8 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை தங்கச் சப்பரத்தில் சுப்ரமணியசாமி தெய்வானை எழுந்தருளி மூன்று வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து மாலை சுப்பிரமணியசாமி தெய்வானை திருவாச்சி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்று சேஷவாகனத்தில் எழுந்தருளி மூன்று வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 12-ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13-ஆம் தேதி காலையில் தேரோட்டமும், மாலையில் மலைக்கு மேல் கார்த்திகை மகா தீபமும், இதைத் தொடர்ந்து 16 கால் மண்டபம் பகுதியில் சொக்கப்பான் தீபக்காட்சியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி, அறங்காவலர்கள் வ.சண்முகசுந்தம் பொம்மத்தேவன், மணிச் செல்வம், ராமையா, கோயில் துணை ஆணையர் சூரியநாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.