தஞ்சாவூர் ஜூன் 19.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் வரும் 20ஆம் தேதி திருக்கல்யாண மகோத்ஸவ விழா நடைபெற உள்ளது.
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆண் பெண் என இரு வகைகளாக வாழ்ந்து இன்புறுகின்றன. செடி கொடிகளிலும் கூட ஆண் பெண் தன்மையுண்டு. எல்லா உயிர்களுக் கும் போகத்தை நுகர இறைவன் சக்தியும் சிவனுமாய் அம்மையப் பராக இருந்து, உலகத்தை உருவாக் குகிறார். உலகில் உள்ள ஆணோ பெண்ணோ எவராயினும் தவத் திற்கு ஒப்பான வழிபாடு செய்தால் சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி காட்சி தந்து வேண்டுவன வரமளித்து அருள் புரிவாய் என்பதே திருக்கல்யாண விழாவில் தத்துவமாகும்.
இத்தகைய அருள் சிறப்புகள் நிறைந்த திருக்கல்யாண திருவிழா தஞ்சாவூர் பெரிய கோவிலில் அருள் தரும் பெரியநாயகி உடனாகிய அருள்மிகு பெருவுடை யாருக்கு நிகழும் ஸ்ரீ குரோதி வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி 20. 6 .2024 வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதை, செயல் அலுவலர் மாதவன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்கா வலர் பாபாஜிராஜா பான்ஸ்லே, கண்காணிப்பாளர் மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்