கன்னியாகுமரி நவ 19
பெருமாள்புரம் ஸ்ரீ மன் நாராயணசாமி நிகழ்தாங்கலில்
திருஏடு வாசிப்பு நிறைவு நாள் விழாவான நேற்று நண்பகல் 12 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, பிற்பகல் 2 மணிக்கு பால்தர்மம், இரவு 7 மணிக்கு அய்யாவுக்குப் பணிவிடை, இரவு 7.30 மணிக்கு அய்யா சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோயில் வலம் வருதல் நடைபெற்றது.
விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.,கலந்து அய்யாவை வணங்கினார்.
பின்னர் சமபந்தி விருந்தினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதில், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைதினேஷ்,தோவாளை யூனியன் சேர்மன் சாந்தினி பகவதியப்பன்,வர்த்தக அணி மாநிலச் செயலாளர் ராஜன்,பேரூர் செயலாளர்கள் சிவபாலன்,எழிலன்,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி,ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் வக்கீல் ராஜேஷ்,நிர்வாகிகள் சுரேஷ்,பாலன்,பால்சன் ,சந்தையடி சிவராஜன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்..
விழா ஏற்பாடுகளை நிழல்தாங்கல் நிர்வாகக்குழு தலைவர் தங்கவேல், செயலாளர் ராஜா, பொருளாளர் சுரேஷ், உறுப்பினர்கள் சிவலிங்கம், தாணுமாலையபெருமாள், சுரேஷ், எஸ்.ஸ்ரீராமச்சந்திரன், மகேஸ்வரன், என்.முத்துகிருஷ்ணன், கலியுக வரதன், ஆலோசகர்கள் ராமச்சந்திரன், சகாதேவன், முருகேசன், பணிவிடைதாரர் கண்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.