தேனி ஜனவரி 30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.30.91 இலட்சம் மதிப்பீட்டில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம் கோடாங்கிபட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டடத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் புதிய அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்கள்.