நீலகிரி. மார். 07
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து வந்த மருத்துவக் குழுவினர் எட்டு நாடுகளை சேர்ந்த மருத்துவக் குழுவினர் மலை ரயிலில் உற்சாக பயணம்.
யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் நீலகிரியின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது இந்த ரெயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் எட்டு நாடுகளை சேர்ந்த பிளாஸ்டிக் சர்ஜரி மருத்துவர்கள் உதகையில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்திற்கு செல்ல நீலகிரி மலை ரயிலை ரூபாய் 8 லட்சம் கொடுத்து வாடகைக்கு எடுத்து மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை குன்னூர் வந்தடைந்தனர் பின்பு குன்னூரில் இருந்து உதகைக்கு புறப்பட்டு சென்றனர் இந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறை மலை ரயில் வாடகைக்கு சிறப்பு ரயிலாக பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த சிறப்பு ரயிலுக்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து நீராவி இன்ஜின் பயன்படுத்தப்பட்டு குன்னூரில் இருந்து டீசல் இன்ஜின் மூலம் உதகைக்குஇயக்கப்பட்டது.