அரியலூர், ஜூன்:28
அரியலூர் மாவட்டம் ,செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி துறை பணியாளர் சங்கத்தின் சார்பாக மாவட்ட இணை செயலாளர் பழனிவேல் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறையில் புதிய அரசு பணி நியமனங்கள் நடைபெறவில்லை எனவும் கலைஞர் கனவு இல்லம் போன்ற புதிய திட்டங்கள் செயல்படுத்தும் போது இருக்கும் ஊழியர்களைக் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால் அதிகப்படியான வேலைப்பளு ஏற்படுவதாகவும் எந்த ஒரு திட்டங்களுக்கும் சரியான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்படுவதிலலை எனவும் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்