தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை தாங்கினார். தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தருமபுரி மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக வழங்க வேண்டிய தின ஊதிய நிலுவைத் தொகை ரூ. 2,118 கோடியை ஒன்றிய அரசு விரைவாக வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆண்டில் 200 நாட்கள் வேலையும் தின ஊதியமாக ரூ.700 வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி சட்டப் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சிகளை நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் 4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழ்நாடு கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.
இதில் சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள்
மாதையன்,அலமேலு, கிருஷ்ணன், மாதையன், ராஜகோபால், பச்சாகவுண்டர், லட்சுமணன்,ராஜமாணிக்கம்,கோவிந்தன், செல்வம் மற்றும் ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.