மதுரை ஜூலை 30,
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக மதுரை மாவட்டம மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனை தொடந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி புதிதாக திறந்து வைக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தில் குத்து விளக்கேற்றினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.பெரியபுள்ளான் (எ) செல்வம், உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.வைஷ்ணவி பால், மாவட்ட ஊராட்சித்தலைவர் சூரியகலா கலாநிதி, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தி ஆகியோர் உடன் உள்ளனர்.