மதுரை மாவட்டம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.1.440 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு வழங்க இலக்கு இதுவரை 9,694 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.816.77 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன வங்கி கடன் இணைப்பு பெற்று பயனடைந்த மகளிர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு பெண்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் கல்வியை ஊக்குவித்திடும் வகையில், பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று தன்னம்பிக்கையோடு சமூகத்தில் முன்னேற வேண்டும் என்ற நோக்கிலும் பல்வேறு அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட பொருளாதாரத் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை இலக்காக கொண்டு இந்தியாவிலேயே முதன் முதலில் மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்த பெருமை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையே சேரும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மகளிர் தாமாக முன்வந்து குழுவாக ஒருங்கிணைந்து தங்களது சேமிப்பை பெருக்கிடவுடம்,
குழு உறுப்பினர்கள் கலந்தாலோசித்து பொருளாதார மேம்பாட்டிற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படுத்திடவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சமூக, பொருளாதார மேம்பாடு அடையவும் மேலும் அரசியல் அதிகாரம் பெற உதவிடும் வகையிலும், இந்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்துகிறது. இத்திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நிதி உதவி வங்கிகளின் மூலம் கடனாக பெற வழிவகை செய்கிறது. மதுரை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 7,353 மகளிர் சுயஉதவிக்குழுக்களும், நகர்புறப் பகுதிகளில் 12733 மகளிர் சுய உதவிக்குழுக்களும் என மொத்தம் 20,086 மகளிர் சுயஉதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மதுரை மாவட்டத்திற்கு 2024-2025-ஆம் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு திட்டத்தின் மூலம் மொத்தம் ரூ.1.440 கோடி மதிப்பீட்டில் கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், அக்டோபர் 2024 வரை 9,694 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.816.77 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக, ஊரகப்பகுதிகளில் உள்ள 4.533 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.385.10 கோடி மதிப்பீட்டிலும், நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 5,161 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.43167 கோடி மதிப்பீட்டிலும் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்துள்ள இலக்கை பூர்த்தி செய்திடும் வகையில் அதிகளவில் புதிய மகளிர் சுய தவிக்குழுக்கள் ஏற்படுத்தி அவர்களுக்கு கடனுதவிகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மகளிர் சுயஉதவிக்குழுவின் வாயிலாக பயனடைந்த மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், குலமங்கலம் ஊராட்யை சேர்ந்த ஜெயவிக்னேஸ்வரி தெரிவித்ததாவது:-
எனது பெயர் ஜெயவிக்னேஸ்வரி நான் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலமங்கலம் ஊராட்சியில் வசித்து வருகிறேன்.
எங்களுடைய சுய உதவிக்குழுவின் பெயர் மதி ஸ்ரீ மதுரை மீனாட்சி ஆகும். கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு எங்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்காக இடவசதி மற்றும் மிஷின்களை உரிய முறையில் அமைத்து கொடுத்திருக்கிறது. மேலும், மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் மகளிர் குழு என்ற பெயரில் சிறுதொழில் அமைத்துக் கொடுத்துள்ளது. இந்த குழுவில் 6 நபர்கள் உள்ளோம். இந்த தொழில் தொடங்குவதற்கு முன்பாக எங்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் 40 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும், இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றபின் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இத்தொழில் தொடங்குவதற்கு மூலதனமான பொருட்களை வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு மகளிர் சுயஉதவிக்குழு மூலமாக ரூபாய் 1 இலட்சத்து 30 ஆயிரம் கடனுதவியாக வழங்கியது. இத்தொழில் தொடங்குவதற்கு முன்பாக நாங்கள் தங்களுடைய வீட்டில் உள்ள வேலைகளை மட்டுமே பார்த்துத்கொண்டு இருந்தோம். தற்போது தமிழ்நாடு அரசு அமைத்துக் கொடுத்த இத்தொழில் வாயிலாக எங்களுடைய வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தினை செயல்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய சார்பாகவும். எங்களுடைய மதி ஸ்ரீ மதுரை மீனாட்சி மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் சுயஉதவிக்குழுவின் வாயிலாக பயனடைந்த மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேச்சிக்குளம் ஊராட்சி, கீழப்பனங்காடி கிராமத்தை சேர்ந்த திருமதி. எஸ்.நித்திய ஜோதி அவர்கள் தெரிவித்ததாவது:
எனது பெயர் எஸ்.நித்திய ஜோதி. நான் மதுரை மேற்கு ஊராட்சி பேச்சிக்குளம் ஊராட்சிக்கு ஒன்றியம், உட்பட்ட கீழப்பனங்காடி கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்களுடைய குழுவின் பெயர் தாமரை மகளிர் சுயஉதவிக்குழு ஆகும். இக்குழுவானது 12 நபர்களுடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் வசித்து வரும் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுதொழில் அமைத்துக் கொடுத்துள்ளது. அதனடிப்படையில், சாம் பிரசாத் முகர்ஜி என்ற திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு எங்களுக்கு மதி மின் உலர் சலவை நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இதற்குமுன் எங்களுடைய குடும்பத்தினை சிரமத்துடனே நடத்தி வந்தோம். தற்போது, தமிழ்நாடு அரசால் அமைத்துக் கொடுத்த இந்த மதி மின் உலர் சலவை நிலையத்தின் வாயிலாக வரும் வருமானத்தின் வாயிலாக எங்களுடைய குடும்பத்தை ஓரளவிற்கு சிரமமின்றி நடத்துவதற்கு உதவியாக உள்ளது. எனவே, கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களில் இணைந்தால் என்னைப்போலவே பயனடையலாம். மேலும், தமிழ்நாடு அரசு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகளவில் கடனுதவிகள் வழங்கி வருகிறது. கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய திட்டத்தினை செயல்படுத்தி எங்களுடைய HG-15
வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு
என்னுடைய சார்பாகவும், எங்களுடைய தாமரை மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
இசாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை மாவட்டம்.
ம.கயிலைச் செல்வம், பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),
மதுரை மாவட்டம்.