சென்னை , ஜன- 30,
திருச்சி பாரதிதாசன் காது கேளாதோர், வாய் பேச முடியாதவர்களுக்கான கல்லூரியில் இருந்து “பேசிஸ் க்ளவுட் சொல்யூஸன்ஸ் ” என்ற ஐடி நிறுவனம் 31 பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பயிலும் மாணவர்களை திருச்சியில் இருந்து சென்னைக்கு ஐ.டி நிறுவனங்களை பார்வையிட விமான மூலம் அழைத்து வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னையில் இயங்கும் பிரபல ஐ டி நிறுவனமான ” பேசிஸ் கிளவுட் சொல்யூசன்ஸ் “தலைமை அலுவலகத்தை சுற்றி பார்க்கின்றனர். அது மட்டுமின்றி ஐ. டி நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவற்றையும் பார்வையிட உள்ளனர்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய மாணவர்கள் விமானத்தில் பயணிக்கும் பொழுது புதுவித அனுபவமாக இருந்தது முதலில் பயத்துடனும் அதன் பிறகு உற்சாகமாகவும் இருந்ததாக தெரிவித்தனர்.
அது மட்டுமின்றி காது கேளாதோர் வாய் பேசாதோர் ஐடி தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு அதில் பணிபுரியவும் முடியும் தனியார் ஐடி நிறுவனம் அந்த கல்லூரியில் இருந்து மாணவர்களை பணியில் அமர்த்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த குறித்து பேசிஸ் கிளவுட் சொல்யூசன்ஸ் நிறுவனர் பிரசாத் பழனி செய்தியாளர்களிடம்தெரிவித்ததாவது:- காது கேட்பு திறன் குறைபாடுள்ள, பட்டபடிப்பு படித்த மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசிஸ் கிளவுட் சொல்யூசன்ஸ் புதிய முன்னெடுப்பை எடுத்துவருகிறது.
இதன் மூலமாக அவர்களுக்கு ஐ.டி நிறுவனங்களைப் பற்றி அறிவை பெறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாது வேலை வாய்ப்பையும் திறனையும் பெறுகிறார்கள். இதே போல்
பெரிய நிறுவனங்களும் தொடர்ந்து செயல்படுவதன் மூலம் அவர்களுக்கு வாழ்க்கையில் , தன்னம்பிக்கை வளரும் என்று தெரிவித்தார்.