ஊட்டி. பிப். 13. உதகை கல்லட்டி பகுதியில் தட்னேரி பன்னிமரா கிராமங்களில் வாழ்ந்து வரும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கக்கோரி அந்த மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எல் சங்கரலிங்கம் உதகை தாலுகா செயலாளர் நவீன்சந்திரன் ஆகியோர் மேற்கண்ட மக்களை சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளைப் பற்றி விவாதித்து உதகை வட்டாட்சியர் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அனுப்பி வைக்கப்பட்டது