ஆரல்வாய்மொழி, நவ.29:
தோவாளை புதூர் பகுதியில் வீட்டின் அருகே மலைப்பாம்பு கிடந்ததால் பரபரப்பு வனத்துறையினர் பிடித்து அடந்த காட்டு பகுதியில் விட்டனர்
தோவாளை புதூர் பகுதியில் சமுதாய நலக்கூடம் உள்ளது தற்போது இது பயன்பாடு இல்லாமல் இருக்கின்ற நிலையில் இதன் அருகே இப்பகுதியை சார்ந்த குழந்தைகள் மாலை நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்பொழுது சமுதாய நலம் கூடத்தின் அருகே உள்ள வீட்டின் பின்புறம் பெரிய பாம்பு நெழிந்து கொண்டிருப்பதை கண்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அதிர்ச்சியடைந்தனர் உடனே அவர்கள் அருகே உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்கவும் அப்பகுதிக்கு விரைந்து வந்தவர்கள் பாம்பு எங்கும் சென்று விடாதவாறு அதன் வால் பகுதியில் சிறிய கைரினை வைத்து கட்டிவிட்டு உடனடியாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர் மாவட்ட வனத்துறை அலுவலரின் உத்தரவின் பேரில் பூதப்பாண்டி வனசரக அலுவலரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் கிடந்த பாம்பினை லாவகமாக பிடித்தனர் பிடிபட்ட பாம்பு சுமார் 12 அடி நீளமுள்ள பெரிய மலைப்பாம்பு என தெரிய வந்தது உடனே அதனை பிடித்து பொய்கை அணை பகுதியில் உள்ள அடந்த வனப்பகுதியில் விட்டனர்