நாகர்கோவில் ஜூலை 11
இந்திய குற்றவியல் சட்டம்,இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம்,மற்றும் இந்திய சாட்சி சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்களை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் சங்கங்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று நீதிமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக கோட்டார் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்றனர்.அப்போது கோட்டார் காவல் நிலையத்தில் முன்பு வழக்கறிஞர்களை போலீசார் தடுப்பு வேலி அமைத்து வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை தாண்டி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் செல்ல முற்பட்டு தடுப்பு வேலிகளை தூக்கி எறிந்தனர்.பின்னர் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இருநூற்று கற்கும் மேற்பட் வழக்கறிஞர்களை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.