சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் சண்முகையாவை சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் அந்த மனுவில்
சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான ஆவுடை பொய்கை தெப்பம் பராமரிப்பு இன்றி உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சங்கரன்கோவில் நகராட்சியில் கோரிக்கையை வைத்துள்ளனர். எனவே இந்த தெப்பத்தில் நகராட்சி மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தங்கள் துறையின் மூலம் தடையில்லா சான்றிதழ் வழங்கினால் அரசு நிதி உதவி பெற்று நகராட்சி மூலம் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும் ,ஆகவே ஆவுடை பொய்கை தெப்பத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது திமுக வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், முன்னாள் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்
சோமசெல்வபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்