அரியலூர்,ஆக;28
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதமும் பருப்பு இல்லை. மண்ணெண்ணெய் எப்போதும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு உள்ளது.ஆனால் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் அரசு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருட்களை கூட சரியாக விநியோகிக்க முடியவில்லை என தமிழ் பேரரசு கட்சி குற்றச்சாட்டு மேலும், தமிழக முழுவதும் அரசு டாஸ்மார்க் கடைகளில் எந்த ஒரு தட்டுப்பாடு இன்றியும் மது அருந்துபவர்களுக்காக சரக்குகள் விற்பனை விறுவிறுப்பாக செய்யப்படுகிறது.
ஆனால் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடைகளில் கிடைப்பது மிகவும் அரிதாக உள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சி கோரிக்கை.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்