திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் இடைவிடா சகாயத் தாயின் 3300 -வது வார விழாவில் தேர் பவனி நிகழ்ச்சி.
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் இடைவிடா சகாயத் தாயின் 3300 -வது வார விழாவில் புனித வளனார் பேராலயத்தின் பங்குத்தந்தை மற்றும் மறை மாவட்ட அதிபர் பேரருள்பணி R.மரிய இஞ்ஞாசி சீரிய வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் மறை மாவட்ட முதன்மை குரு பேரருள்பணி
T.சகாயராஜ், மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி A.சாம்சன் ஆரோக்கியதாஸ் ஆகியோர்கள் தலைமையில் திருவிழா தேர் பவனி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள்.இந்த தேர் பவனி திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் புனித வளனார் பேராலயத்தில் வந்து நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் உதவி பங்குத் தந்தையர்கள் அருள்பணி A.ரிக்சன் ராபர்ட் ,அருள்பணி M. லீனஸ், மெர்சி, பொறியாளர்
C.பெஞ்சமின் ஆரோக்கியம், திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கத்தின் துணைத் தலைவர் Ln.Dr.N.S.A.ஜெய ஆரோக்கிய செல்வன், A.சேசு அமல்ராஜ், சமய நல்லிணக்க தலைவர்கள், இருபால் துறவியர், சகாய மாதா இயக்கம், பங்கு பேரவை, அனைத்து பக்த சபைகள், அன்பியங்கள் மற்றும் பங்கு இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேர் பவனி விழாவை சிறப்பித்தார்கள்.