தேனி.
தேனி மாவட்டம் காமாட்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார் இவர் தனது இரண்டாவது மகள் நிவேதாவை வெங்கடாசலபுரம் ஸ்ரீ வரதா வெங்கட்ராம உயர்நிலைபள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். இதன்படி 12ம் வகுப்பில் 472 முதல் மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளார்.இதனைத் தொடர்ந்து பாராட்டு விழா ஒன்று நடத்துவதாக பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கான ஏற்பாடு கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் நடைபெற்று வந்துள்ளது. காமாட்சிபுரம் உதவி பொறியாளர் ராஜ்குமார் புதல்வி நிவேதாவுக்கு பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவி என கேரள மாநிலம் கோட்டயம் தனியார் மஹாலில் பாராட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதில் பெற்றோர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் கேராள துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவியை வாழ்த்தி நினைவு பரிசு,சான்றிதழ் வழங்கினர்.நிகழ்வைக் கண்ட பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்,மாணாக்கர்களும், மாணவிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில் . செப்பேடு புகழ்பெற்ற தேனி மாவட்டத்திற்குபெருமை சேர்க்கும் விதமாக கேரள மாநிலம் கோட்டயத்தில் பாராட்டு விழா பெற்றது நமது தேனிக்கே பெருமை என்று கூறினர்.