தென்தாமரைகுளம்., ஜன. 16.
தென்தாமரைகுளம் கோல்பின் குடும்பம் புனித ஜார்ஜியார் நற்பணி இயக்கம் சார்பில் பொங்கல் விழா தென்தாமரை குளம் தூய பனிமய அன்னை ஆலய வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி வடம் இழுத்தல், பானை உடைத்தல்,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவுக்கு பங்குத் தந்தை சுரேஷ் தலைமை வகித்தார்.பொங்கல் வைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 8 குழுவினர் பங்கேற்றனர்.அவர்கள் அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய ஆடைகள் அணிந்திருந்தனர்.
பெங்கலிடுதலில் அலங்கார வண்ணமயமான கோலங்கள்,கரும்பு,தானிய வகைகள்,கிழங்கு வகைகள்,பழங்கள்,நெற்கதிர்,கலப்பை,உரல்,மரைக்கா முதலியவை இடம்பெற்றிருந்தது.
போட்டிகளில் முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சுழற்கோப்பை யும், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கமும்,மூன்றாம் பரிசு பெற்ற அணிக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கமும், ஆறுதல் பரிசு பெற்ற அணிக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பரிசாக வழங்கப்பட்டது.
பரிசுகளை தந்தை சுரேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் புனித ஜார்ஜியார் நற்பணி இயக்க உறுப்பினர்கள் மற்றும் பங்கு மக்கள் திரளாக பங்கேற்றனர்