அருமனை, பிப்.7
அருமனை அருகே கிளாத்தூர் என்ற பகுதியில் கோழி தீவனம் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தது. இதை கிரண் (40) மற்றும் தீரஜ் ரோஸ் (48) ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்துக்கு அலெக்ஸ் என்பவர் நிலத்தை குத்தகைக்கு கொடுத்தார்.
நிறுவனம் சார்பில் வங்கி கடன் ரூ. 39 லட்சம் உள்ளது. மீண்டும் நிறுவன உரிமையாளர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி ராஜ் என்பவரிடமிருந்து ரூ. 29 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். அந்த பணத்தை கொண்டும் மேலும் பல எந்திரங்கள் வாங்கினார். இருப்பினும் நிறுவனம் சரியாக ஓடாததால் வங்கி ஜப்தி நோட்டிஸ் அனுப்பி ஒரு வருடமாக சீல் வைக்கப்பட்டது. .
இந்த நிலையில் கேரளாவிலிருந்து கடன் கொடுத்த ஷாஜி ராஜ் அருமனைக்கு வந்து நில உரிமையாளர் அலெக்ஸை சந்தித்த பேசி, நேற்று நள்ளிரவு நிறுவனத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை 3 லாரிகளில் திருடினர்.
இன்று காலை லாரி புறப்பட்டபோது நிறுவன உரிமையாளரின் மனைவி எதேர்ச்சையாக பார்த்துள்ளார். உடனடியாக அருமனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடனே உஷாராகி கேரளா எல்லை சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுத்து, பல கிலோ மீட்டர் தூரத்தி கேரளா சென்ற இரண்டு லாரிகளையும் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நில உரிமையாளர் அலெக்ஸ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.