அருமனை, டிச- 8
அருமனை அருகே புத்தன்சந்தை பகுதியில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த குத்து விளக்கு மற்றும் சிசிடிவி கேமராக்களை திருடி உள்ளார். நேற்று காலை அப்பகுதி மக்கள் கோவிலுக்கு சென்ற போது கோவில் கதவு திறந்து கிடந்தவுடன் சிசிடிவி கேமராக்கள் உடைந்து பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று (7-ம் தேதி) காலை இரண்டு நபர்கள் கோவில் திருடிய பொருட்களை செம்மங்காலை பகுதியில் விற்பனைக்கு கொண்டு சென்றனர். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடித்து, அவர்களிடம் விசாரித்த போது கோவிலில் திருடிய பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது.
இது குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் பொருட்களை திருடியது மருதங்கோடு பகுதியை சேர்ந்த மனோஜ் என்பதும், திருடிய பொருட்களை விற்பனை செய்ய தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த நடராஜன் என்பதும் தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் பொருட்களை திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.