ஆத்தூர் பேரூராட்சியில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் வட்டார மருத்துவ அலுவலர்கள் பார்த்திபன் MBBS மற்றும் ஜூடி MBBS ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு விழா பேரூராட்சி மன்றத் தலைவர் AK. கமால் தீன் தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கேசவன் பாலசிங் அசோக் குமார் பிச்சிமுத்து(எ) சிவா முத்து ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்வில் வட்டார ICTC ஆற்றுநர் அமராவதி ஆய்வக நிபுணர் சண்முகசுந்தரம் சுகாதார ஆய்வாளர்கள் சுபாஷ் ஹரி ராமச்சந்திரன் மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலக பணியாளர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.